பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஆய்வு செய்யும் ஆணையத்தின் கால வரையறை மே 31, 2019 வரை நீடிப்பு!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 01:07 am
obcs-in-the-central-list-gets-extension-till-may-31

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வகைப்படுத்தல் குறித்து ஆய்வு செய்யும் ஆணையத்தின் காலத்தை நவம்பர் 30,2018 –லிருந்து மே 31, 2019 வரை நீடித்துள்ளது.

ஆணையம், மாநில அரசுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையங்கள், பல்வேறு சமூக சங்கங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் ஆணையங்கள் ஆகியோருடன் விரிவான கூட்டங்களை நடத்தி, உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மத்திய அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், பொது துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த ஆவணங்களை,  ஜாதிவாரியாக சேகரித்துள்ளது.

தாங்கள் பெற்ற ஆவணத்தை மற்றும் தரவை ஆய்வு செய்ததில், ஆணையம், மத்திய பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வகைப்படுத்தல் மற்றும் அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்பு மாநில அரசுகள் மற்றும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையங்களுடன் மற்றொரு சுற்று விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close