தேசிய அரசியலமைப்பு தினம்: எல்லையில் வீரர்கள் கொண்டாடினர்!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 01:36 pm
celebration-of-indian-constitution-day

நவம்பர் 26ம் தேதியான இன்று தேசிய அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி இன்று பல்வேறு தலைவர்கள் இதனை நினைவு கூர்ந்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பாதுகாப்புப்படையினராலும் இது கொண்டாடப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய மக்களின் பாதுகாப்பிற்காகவும், நாட்டை செம்மையாக வழிநடத்தவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.  சட்டமேதை அம்பேத்கர் தலைமையிலான குழு இதனை உருவாக்கியது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாள் 1949 நவம்பர் 26. ஆனால் இது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஜனவரி 26. 

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதனை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் பொருட்டும் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியை தேசிய அரசியலமைப்பு தினமாக மத்திய அரசு அறிவித்தது. 

அதன்படி இன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது. 

மேலும், டெல்லி சி.ஐ.எஸ்.எப் சார்பாக கூடுதல் இயக்குநர் ஜெனரல் அலோக் குமார் அரசியலமைப்பு சட்டத்தை வாசித்தார். மேலும் நமது அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு சமத்துவம், நீதி, மற்றும் சுதந்திரத்தை தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று இந்தோ- திபெத் பாதுகாப்புப்படையினர் சார்பிலும் கொண்டாடப்பட்து. இந்தோ- திபெத் எல்லையில் வீரர்கள் அரசியலமைப்பு சட்டத்தை வாசித்து மரியாதை செலுத்தினர். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close