காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்; ராணுவ வீரர், 3 தீவிரவாதிகள் பலி!

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2018 05:56 pm
kashmir-attack-soldier-3-terrorists-killed

ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய ராணுவ வீரர் ஒருவரும், 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில், பாதுகாப்பு படையினருக்கு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்தது. இதைத் தொடர்ந்து , ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி சோதனையின் போது,  தீவிரவாதிகள், சுடத் துவங்கினர். பதிலுக்கு ராணுவம் சுட்டது. இந்த சம்பவத்தில், ராணுவ வீரர் ஒருவரும், இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சி.ஆர்.பி.எஃப் படையை சேர்ந்த ஒரு காவலரும், சப் இன்ஸ்பெக்டரும் காயமடைந்தனர். 

அதேபோல, புல்வாமாவின் த்ரால் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சார்ந்த அன்சர் கஸ்வதூல் ஹிந்த் என்ற அமைப்பின் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் ஷகிர் ஹசான் டார் என்பவர் கொல்லப்பட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close