இதுதான் விதி என்பதா...?

  பாரதி பித்தன்   | Last Modified : 27 Nov, 2018 08:18 pm
mumbai-attack-constitution-day-november-26

இந்தியர்கள் வாழ்வில் மறக்கமுடியாத நாள் நவம்பர் 26.  இந்தியா அடிமைத்தளையில் இருந்து விடுதலையான பின், பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்றபட்ட ரத்தத்தை துடைத்துக் கொண்டு நாட்டை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் நம் தலைவர்கள் மீது வந்து விழுந்தது.

டாக்டர் ராஜேதிர பிரசாத் தலைமையிலான குழு இந்த பெரும் பொறுப்பை ஏற்றது. உண்மையில் இந்த பொறுப்பின் கணத்தை முற்றிலும் சுமந்தது அம்பேத்கர் தான். அவர்  தேர்ந்தெடுத்த கொத்தனார் செங்கல் செங்கலாக எடுத்து வீட்டை எழுப்புவது போல, சிற்பி கற்பனை சிலையை சிறிது சிறிதாக செதுக்கி கல்லுாக்குள் இருந்து சிலையை வெளியே எடுப்பது போல அரசியல் சாசனத்தை உருவாக்கினார். அடித்தட்டு சமுதாயத்தில் இருந்து எழுந்ததால் அவர் கடைக்கோடி இந்தியன் கூட இந்த நாடு இருக்கும் வரையில் கைவிடப்பட்டு விடக் கூடாது என்று எண்ணி அரசியல்சாசனத்தை உருவாக்கினார்.

மொத்தம் 7635 திருத்தங்கள், அவற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை 2473. பின்னர் 395 ஷரத்துகள் கொண்ட அரசியல்சாசன குழந்தை பிறந்தது.

இன்றைக்கு மிகப் பெரிய விவாத அலைகளைத் தோற்றுவிக்கும் விவகாரங்களுக்கு கூட அரசியல் சாசனத்தில் விடை கிடைக்கிறது என்றால், நம் தலைவர்கள், குறிப்பாக அம்பேத்கரின் சிந்தனை வீச்சு தெரியவரும்.

அனைவருக்கும் வாக்குரிமை, நீதிமன்றங்களி்ன் அதிகாரிம், பசு வதை தடுப்பு, மது விலக்கு என்று பலவற்றின் அடிநாதம் அரசியல் சட்டத்தில் இருந்தன என்பது இப்போது நினைத்தாலும் வியப்பை ஏற்படுத்தும். புகழ் மி்க்க அரசியல்சாசனம் இந்தியாவில் ஏற்றுக் கெள்ளப்பட்ட இதே நாளில் தான் இன்னொரு வேதனையான சம்பவமும் நிகழந்தது என்பதை விதி என்பதை விட வேறு எப்படி குறிப்பிடபிடி முடியும்.

2008ம் நவம்பர் 26ம் தேதி பொருளாதார தலைநகர் என்று போற்றப்படும் மும்பை கோரமாக சிதையும் என்று இந்தியாவில்  ஏன் உலகிலேயே யாரும் சிந்தித்து இருக்கமாட்டார்கள். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் பின்னணியில் இஸ்லாத்தை கடைபிடிக்கும் தீவிரவாதிகள் (தீவிவாதிகளுக்கு மதம் கிடையாது). 11 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர்.  இதில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் காயம் அடைந்தனர். சத்திரபதி சிவாஜி முனையம், தி ஓபராய் டிரைடன்ட் ஓட்டல், தாஜ் மஹால் பேலஸ் மற்றும்டவர், லியோ போல்ட் கஃபே காமா மருத்துவமனை( பெணகள் மற்றும் குழந்தைகள்) நரிமன் ஹவுஸ் உட்பட 8 இடஙகளில் தாக்குதல்கள் பலமாக இருந்தது. தாஜ் .ஹோட்டலில் ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ மூலம் தேசிய பாதுகாப்புபடையில் அனைத்து தீவிரவாதிகளையும் அகற்றிய பின்னர் தாக்குதல் முடிவுக்கு வந்தது.

அது வரையில் தரைமார்க்கமாக மட்டும் பயணம் செய்து வந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் தான் முதல் முறையாக கடல் மார்க்கத்தில் வந்து தாக்கினர். கடற்பாதுகாப்பு பற்றி அவ்வளவாக கவலைப்படாத நிலையில் தான், தீவிரவாதிகளுக்கு அந்த பாதை திறந்து விட்டது போல் மாறிவிட்டது.

இந்த தாக்குதலில் அஜ்மல் கசாப் உயிருடன் பிடிக்கப்பட்டான். இவன் பாகிஸ்தானி என்று சொன்னதை முதலில் ஏற்றுக் கொள்ளாத அந்த நாடு 2009 ஜனவரி 7 அன்று இந்திய அரசின் கூற்றை ஒப்புக் கொண்டது.

அமெரிக்கா போன்ற நாடுகள் தனது குடிமகன் ஒருவனுக்கு பாதிப்பு என்றால் கூட சம்பந்தப்பட்ட நாட்டின் மீது போரே தொடுக்கும் நிலையில், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் அஜ்மல் கசாப் மீது முறையாக வழக்கு நடத்தி 4 குற்றங்களுக்கு துாக்கு தண்டனையும், 5 குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. பின்னர் அப்பீலில் சுப்ரீம் கோர்ட் ஆகஸ்ட் 29,2012 உறுதி செய்து . அதன்பின்னரும் அப்துல்கசாப் குடியரசு தலைவருக்கு கருணை மனு எழுதி, பின்னர் அதுவும் நிராகரிக்கப்பட்டு 2012 நவ. 21 அன்று அதிகாலை துாக்கிடப்பட்டான் என்றால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு, அதன் உயிர் நாடியாக விளங்கும் அரசியல் சாசனத்திற்கு எவ்வளவு பெருமை. 

இந்தியா இந்த விவகாரத்தில் பொறுப்பாக நடந்து கொண்டதால், இன்று அமெரிக்கா இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதில் தொடர்பு கொண்டவர்கள் பற்றி துப்புக் கொடுத்தால் 5மில்லியன் டாலர்( சுமார் ரூ. 35 கோடி) வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இதற்காக தொலை பேசி எண், இ–மெயில் முகவரி ஆகியவற்றையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சிங்கப்பூரில் பிரதமர் மோடியும், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் சந்திப்புக்கு பின்னர் அந்த நாடு இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த அளவிற்கு இந்த வழக்கு இழு இழு என்று நீடித்தது பல குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்ற கொள்கை தான் காரணம்.

இத்தனை புகழ் மிக்க அரசியல் சாசனம் உருவான அதே நாளில், குற்றவாளியிடம் கூட கருணை காட்டி அதன் வலிமையை நிரூபிக்க வாய்ப்பு ஏற்படுத்திய  மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் அதே நாளில் நடந்தது என்பதை விதி என்று சொல்வதை விட வேறு வார்த்தைகள் ஏதேனும் உள்ளதா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close