லாஜிக்ஸ் இந்தியா மாநாட்டின் லோகோ மற்றும் தகவல் கையேட்டை வெளியீடு!

  சுஜாதா   | Last Modified : 28 Nov, 2018 06:07 am
commerce-minister-launches-logo-and-brochure-of-logix-india

லாஜிக்ஸ் இந்தியா மாநாட்டின் லோகோ மற்றும் தகவல் கையேட்டை வெளியிட்டார் மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு. மேலும் ஜனவரியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகள் பங்கேற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் உலகத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும் உலகெங்கும் உள்ள நாடுகளுடன் சிறந்த சரக்கு போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா முற்படுவதாகவும் கூறினார்.

மேம்பட்ட சர்வதேச வர்த்தக சரக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவும், மற்ற துறைகள் மலிவான சரக்கு போக்குவரத்து வசதியை பெறுவதற்கும் இந்த லாஜிக்ஸ் இந்தியா மாநாடு உதவும் என்று அவர் கூறினார்.

இந்த மாநாடு புது டெல்லியில் ஜனவரி 31, 2019 முதல் பிப்ரவரி 2, 2019 வரை நடைபெறும். இந்த மாநாட்டை இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

உலக வங்கியின் சரக்கு போக்குவரத்து செயல்பாட்டு அட்டவணை 2018-ல் இந்தியா 44 வது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதார ஆய்வு 2017-18 தரவின்படி இந்திய சரக்குபோக்குவரத்து துறையின் மதிப்பு 160 பில்லியன் டாலராகும், மேலும் இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 215 அமெரிக்க டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறை 22 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10.5 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close