பாகிஸ்தானை அதிரவைத்த சீனாவின் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 03:27 pm
china-notice-pakistan-shocks

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தமானதுதான் என சீனா அறிவித்துள்ளது. சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு வெற்றியாக  இது கருதப்படுகிறது.  அதேசமயம், சீனாவின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச அரசியல் அரங்கில் சீனாவும்,பாகிஸ்தானும் நட்பு நாடுகளாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில்,சீன அரசு தொலைக்காட்சி நிறுவனமான சிஜிடிஎன், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்டுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அண்மையில் செய்தி வெளியிட்டது. அதில்,இடம்பெற்றுள்ள ஜம்மு- காஷ்மீர் மாநில வரை படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் நிலப்பரப்பும் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிதான் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,பாகிஸ்தான் ஆக்கிரமிரப்பில் உள்ள காஷ்மீர் பகுதியை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால  கோரிக்கைக்கு வலுசேர்ப்பதாகவும் உள்ளது.

மறுபுறம், சீன தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் செய்தியின் மூலம் சீனா -பாகிஸ்தான் இடையேயான ராணுவ மற்றும் பொருளாதார உறவுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இம்மாதத் தொடக்கத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "பொருளாதார உதவிகள் குறித்து சீனாவிடமிருந்து விரைவில் நல்ல செய்தி வரும்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான சீன அரசு தொலைக்காட்சி இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது சீனாவின் நட்பு நாடாக அறியப்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம்,சீனாவின் இந்த செயல்பாடு, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக, அந்நாட்டுக்கு அளித்துவந்த பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என  அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததார். மேலும் சர்வதேச செலவாணி நிதியமும்- (ஐஎம்எஃப்) பாகி்ஸ்தானுக்கு வழங்கி வரும் பொருளாதார உதவிகள் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை  எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close