தீவிரவாத இயக்க தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 08:34 am
congress-backs-navjot-sidhu-in-row-over-photo-with-pro-khalistan-activist

கர்தார்பூர் வழித்தட அடிக்கல் நாட்டு விழாவுக்காக பாகிஸ்தான் சென்ற பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து, அங்கு தீவிரவாத இயக்கத்தின் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தானின் கர்தார்பூரில் ராவி நதிக்கரையோரம் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் உள்ள சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கமாகும். எனவே, கர்தார்பூரையும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பதற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. 

இந்த வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நிராகரித்துவிட்டார். இந்த விழாவானது புதன் கிழமை கர்தார்பூர் நகரில் நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா, இந்தியா சார்பாக மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிப் பேசியது ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அங்கு காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் கோபால் சிங் சாவ்லாவுடன், சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சித்துவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாவ்லா  தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம், சித்துவுக்கு எதிராக மீண்டும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.  சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை விமர்சித்துள்ள பாஜக, இது போன்ற சந்திப்புகளில் இருந்து சித்து விலகியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, "சித்து சொந்த விருப்பத்தின் படி தான் பாகிஸ்தான் சென்றார். பாகிஸ்தான் பிரதமரின் உறவினர்களுக்கு இரண்டு வருடங்களா பழங்கள் அனுப்பினார் மோடி. அப்போது எல்லாம் பா.ஜ.க எதுவும் பேசவில்லை" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close