ரஃபேல் போல பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிக பெரிய ஊழல்: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 01:26 pm
demo-like-rafale-was-a-crime-against-india-rahul-gandhi

ரஃபேல் போல பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் மிக பெரிய ஊழல் தான் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பணமதிப்பிழப்பை ஆதரித்தாரா? இல்லையா?என்ற தலைப்பில் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். 

மேலும் அந்த பதிவில், "ரஃபேல் போல பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் பெரிய ஊழல் தான். மனோகர் பரிக்கர் ரஃபேல் விவகாரத்தில் இருந்து எப்போதும் தள்ளியே இருந்தார். அதே போல சும்பிரமணியனும் தற்போது  செய்கிறார். பணமதிப்பிழப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை என்றால் பதவி விலகி இருக்கலாமே?. கவலைப்படாதீர்கள்... இவை அனைத்து குறித்தும் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close