டிசம்பர் 7: பாதுகாப்புப் படையினர் கொடி நாள்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 03:43 pm
december-7-armed-forces-flag-day

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 -ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை பாதுகாப்புப் படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. 

சுதந்திர இந்தியாவிலே, 1949 ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் 28 ஆம் தேதி, இந்திய தற்காப்பு பிரிவின் கீழ் , ஒரு கமிட்டி அமையப்பெற்றது. அக்கமிட்டியின் கொள்கைப்படி டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

தாய் நாட்டிற்காக தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும், நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

கொடியின் வரலாற்றை நினைவில் நிறுத்தவும், முக்கியமாக நாட்டின் எல்லையை காக்கும் படை வீரர்களின் குடும்பங்களை, பாதுகாப்பது நம் கடமையும் பொறுப்பும் ஆகும், என்பதை பொதுமக்களிடம் வலியுறுத்தவுமே, அவர்களிடம் இருந்து நிதி திரட்டும் முறை உருவாக்கப்பட்டது.

நாடெங்கும் திரட்டப்படும் நிதியை, நிர்வகிக்கும் பொறுப்பு கேந்திரிய சாய்னாக் போர்ட் (Kendriya Sainik Board) ஐ சார்ந்ததாகும். பல தொண்டு நிறுவனங்களும் , பள்ளிகளும், கல்லூரிகளும், பொதுமக்களிடம் நிதி திரட்டும் பொறுப்பை ஏற்றுள்ளனர். தாய்நாடு மீதும், தாய் நாட்டைக் காக்கும் வீரர்கள் மீதும் பற்றுள்ள நாமும் டிசம்பர் 7ல், நிதியளிப்போம். 

நாட்டு மக்கள் இன்று மட்டும் அல்ல, என்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டி, தங்கள் வாழ்வின் மெய்வருத்தம் பாராது கண்துஞ்சாது எல்லையைப் பாதுகாத்து வரும் எல்லை பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமல்ல, ராணுவம் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையின் அனைவருக்கும் நியூஸ் டிஎம் ஆசிரியர் குழு சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 
ஜெய்ஹிந்த் !

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close