ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது 2 ராணுவ வீரர்கள் பலி

  டேவிட்   | Last Modified : 02 Dec, 2018 12:17 am
2-soldiers-dead-in-bomb-blast-in-jammu-kashmir

ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்ற முற்பட்டபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆக்னூர் என்னும் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியை அகற்ற முயன்றபோது, திடீரென கண்ணி வெடி வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்துள்ள பலரில், ஒருவரது நிலைமை மோசமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close