நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம்: சுஷ்மா ஸ்வராஜ்

  டேவிட்   | Last Modified : 02 Dec, 2018 07:41 am
india-economic-increases-7-3-said-sushma-swaraj

கடந்த 3 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியின்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்ததாகவும், ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதாக தலைமையிலான கடந்த 3 ஆண்டு ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், நிகழாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், தனது உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தொற்று மற்றும் தூசியிலிருந்து விலகியிருக்கும்படி மருத்துவர்கள்  அறிவுரை வழங்கியுள்ளதாகவும் சுஷ்மா ஸ்வராஸ் குறிப்பிட்டார். தூசியை தவிர்ப்பதே தனமு உடல்நலத்திற்கு ஏற்றது என்பதால் தான், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை, எனவும்,  அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என தான் எப்போதும் கூறவில்லை எனவும் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஸ் தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close