இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஹெலிகாப்டர் தரகர் கிறிஸ்ட்டியன் மிஷல் !

  டேவிட்   | Last Modified : 05 Dec, 2018 12:37 am
vvip-chopper-deal-middleman-christian-michel-extradited-to-india

மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஊழல் வழக்கில், தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிஷலை, துபாயிலிருந்து நாடு கடத்த, அந்நாட்டு அரசு அனுமதியளித்ததையடுத்து,  துபாயிலிருந்து அவர் நாடு கடத்தப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டார்.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதற்காக, இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில், ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, முக்கிய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. 

இதனிடையே, இந்த ஊழல் வழக்கில் தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிஷல் துபாய்க்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்த அனுமதி கோரி, இந்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, மைக்கேல் சார்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

பின்னர் தீவிர விசாரணைக்குப்பின், அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் விவகாரத்தில் ஊழல் செய்ததை ஒப்புக் கொண்ட கிறிஸ்ட்டியன் மிஷலை இந்தியாவுக்கு நாடு கடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஒப்புக் கொண்டது. 

இதனையடுத்து, மிஷலை நாடு கடத்த அனுமதி அளித்து, ஐக்கிய அரபு எமிரோட்ஸ் அரசு உத்தரவிட்டது. பின்னர் துபாயிலிருந்து விமானம் மூலம் அவர் அழைத்து வரப்பட்டார். நேற்று இரவு (நவ.4) டெல்லி கொண்டு வந்தடைந்த அவரை கைது செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close