மோடிக்கு முதலிடம் ராகுலுக்கு இரண்டாமிடம்..!

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 05:05 pm
metoo-modi-deepveer-are-twitter-s-biggest-2018-india-moments

இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் இந்த ஆண்டில் நடைபெற்ற டாப் 10 அரசியல் நிகழ்வுகள், சமூக வலைதளத்தை அதிர வைத்த பிரபலங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து ட்விட்டர் ட்ரெண்ட் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 2018 ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் டாப் 10 பட்டியலில் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தபடியாக ராகுல் காந்தி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர். அதேபோல் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கார்வாசவுத் என்ற பண்டிகையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படமே அதிக லைக் செய்யப்பட்ட ட்வீட். சுமார் 2,15,000 பேர் அதை லைக் செய்துள்ளனர். 2018 இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின்போது இந்திய கால்பந்து அணியின் ஸ்கிப்பர் சுனில் சேத்ரி வீடியோ மூலம் ரசிகர்களுக்கு அரங்கை நிரப்புமாறு வேண்டுகோள் விடுத்து பதிவிட்ட வீடியோ ட்வீட்டே அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ட்விட்டரில் அதிகம் விவாதிக்கப்பட்ட விவாதப்பொருள் மீடூ என்பதும் கூறப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close