பொதுமக்கள் பணத்தை திருப்பி கொடுக்கத் தயார் : விஜய் மல்லையா ட்விட்டரில் தகவல்

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 11:33 pm
vijay-mallaiah-agreed-to-pay-back-the-money

வங்கிகளில் தான் பெற்ற அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக தலைமறைவாகியுள்ள விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையாவை, தற்போது இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் விஜய் மல்லய்யா தனது ட்விட்டர் பக்கத்தில்,  “நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இவை அனைத்தும் தவறானது. பணத்தை திருப்பி செலுத்த கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கெகாண்ட பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்தாமல் இருப்பது வேதனைஅளிப்பதாய் உள்ளது.  என்னை இந்தியாவுக்கு அழைத்து வர தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு சட்டப் பிரச்சினையாய் இருந்தாலும், அதில் மிக முக்கியமானது மக்கள் பணம்தான். அதை முழுமையாக திரும்ப தருகிறேன். வங்கிகளும், மத்திய அரசும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார். 

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொடர்புள்ள கிறிஸ்டியன் மிக்கேல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நாடு கடத்தப்பட்டு, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விஜய் மல்லையாவும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில், அவர் இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டிருக்கலாம் என பரபரப்பாய் பேசப்படுகிறது. 

விஜய் மல்லையா மீதான நாடு கடத்தல் வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close