இது அடுத்த அடி...!

  பாரதி பித்தன்   | Last Modified : 06 Dec, 2018 12:38 am
world-trade-organisation-steps-special-story

அமெரிக்கா, சீனா வர்த்தகப் போர் இரு நாடுகளுக்கும் மட்டும் சேதம் ஏற்படுத்தாமல் மற்ற நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறையை குறைக்க சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், உருக்கு, அலுமினியத்திற்கு கூடுதலாக வரிவிதித்தது.

இது இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுதியது. இந்தியாவில் இருந்து 2017–18ம் ஆண்டில் இது வரை 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதே காலகட்ததில் 26.7 பிலியன் டாலர் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா உருக்கு மற்றும் மற்றும் அலுமினியத்திற்கு முறையே , 25, 10 சதவீத கூடுதல் வரி இந்தியாவிற்கு ஏற்றுமதி, இறக்குமதி பற்றாக்குறையை அதிகரிக்கும். இதன் காரணமாகத்தான் உலக வர்த்தக நிறுவனத்தில் அமெரிக்கா மீது இந்தியா புகார் கொடுத்துள்ளது.

இது போன்ற விவகாரத்தில்  2 நாடுகள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்முறையாக புகார் செய்யும் போது அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரம் உலகவர்த்தக அமைப்புக்கு உள்ளது. ஆனால் மீண்டும் புகார் செய்யும் போது அவ்வாறு செயல்பட முடியாது. மேலும் தற்போது இந்தியாவுடன் சுவிஸ்சர்லாந்தும் சேர்ந்து புகார் கொடுத்துள்ளது.

இதன் காரணமாக தற்போது இந்த விகாரத்தை விசாரிக்க தனியே குழு அமைக்க இருப்பதாக உலக வர்த்தக அமைப்பு ஒப்புக் கொண்டதாக அந்த நிறுவனத்தன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே போல கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன், சீனா, கன்டா, மெக்சிகோ, நார்வே ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கொடுத்த புகாரின் பேரிலும் குழு அமைப்பதாக ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

திறந்த நிலை பொருளாதாரத்தி்ல் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, தற்போது வரியை அதிகரித்திற்கு உள்நாட்டு வணிக சூழலை காரணம் காட்டி சப்பைக் கட்டு கட்டுகிறது. அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் உலக வர்த்தக அமைப்பில் மிக சொற்பாக பயன்படுத்தபடும், விளக்கம், விதிமுறைகளை தனது நடவடிக்கைக்கு ஆதரவாக எடுத்துக்காட்டுகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவும் ஒரு சில நாடுகள் மீது புகார் கூறி உள்ளது. கச்சா எண்ணை விவகாரத்தில் ஆரம்ப கட்ட சூரத்தனம் காட்டிய அமெரிக்கா, இந்தியா சீறியதும், விலக்கு அளித்து அறிவித்தது போலவே இதிலும் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கலாம். அப்படி நிகழ்ந்தால் அது அமெரிக்காவிற்கு அடுத்த அடியாவும், இந்தியாவிற்கு 2வது  மகுடமாகவும் இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close