தாஜ்மஹாலில் புதிய நுழைவுக்கட்டணம் இன்று முதல் அமல்

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 06:35 pm
the-new-entrance-fees-in-taj-mahal-is-from-today

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் நுழைவுக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இந்த தாஜ்மஹால் 16ம் நூற்றாண்டில் பளிங்கு கற்களால் கட்டபட்டது. இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் இந்த தாஜ்மஹாலை பார்வையிட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருவதுண்டு.

சுற்றுலா பயணிகள் தாஜ்மாஹாலை பார்வையிட இதுவரை நுழைவுக்கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு ரூ.250 ம், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு  ரூ.1,300 ம், சார்க் நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 750 ம் ஆக நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 டிக்கெட் பெறும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கமாட்டார்கள் எனவும், வெளிப்புறம் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாசுபாடுகளில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்து நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close