ரஃபேல் போர் விமானம் தீர்ப்பு, தவறாக பேசியவர்களை அறையக் கூடிய வகையில் உள்ளது: அமித் ஷா

  டேவிட்   | Last Modified : 14 Dec, 2018 02:19 pm
amit-sha-s-sentence-about-rafel-judgement

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது இதுகுறித்து இதுவரை தவறாக பேசிவந்தவர்களின் முகத்தில் அறையக்கூடிய வகையில் உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்பி மக்களிடையே பொய்ப்பிரசாரத்தில் ஈடுபட்டுவந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் அதுகுறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்கள் இருக்கிறது என்றால், அவர்கள் ஏன் அதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.  ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்றால் அதுகுறித்து அவையில் விவாதம் நடைபெற வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதா என்றும் வினவியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் தலைமை தயாரக இருந்தால் கூட்டுக்குழு அமைத்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை மேற்கொள்ளலாம் என்று அமித் ஷா டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்போது அறிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close