ராகுல் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்: ராம் மாதவ் வலியுறுத்தல் !

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 02:51 pm
rahul-should-apology-ram-madhav

பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த பல மாதங்களாக தொடர்ந்து தவறாக பேசி வந்த ராகுல் உட்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் வலியுறுத்தியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் மேற்கொண்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து தவறாக சித்தரித்து வந்த எதிர்க்கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராம் மாதவ் சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராம் மாதவ் இதுகுறித்து கூறுகையில்,  "காங்கிரஸ் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதன் தேசியத் தலைவர் ராகுல் ஆகியோர் பிரதமர் நரேந்திரமோடி குறித்து, பல மாதங்களாக தொடர்ந்து  அவதூறு பரப்பி வந்தனர். அவர்கள் மேற்கொண்ட பிரசாரம் பொய்யானது என்று உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. தவறான தகவல்களை தெரிவித்து வந்த அவர்கள் மக்கள் மன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும்  சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராமர் மாதவ் அறிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close