சர்வதேச சந்தையில் சரிந்துவரும் கச்சா எண்ணெய் விலை... யார் காரணம்?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 18 Dec, 2018 04:32 pm
rates-of-crude-oil

சர்வதேச சந்தையில் நேற்று கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கும் கீழே சரிந்தது. கடந்த ஒரு வருடமாக கச்சா எண்ணெய் விலை 45 டாலர்களிலிருந்து 77 டாலர் வரை விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால் இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலையும், அந்தந்த நாடுகளின் பண மதிப்பு சரிந்தும் வந்தன. 

இந்தச் சூழலில் சர்வதே எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் விலைகளைக் கட்டுப்படுத்தத்  தீவிரமாகப் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார் பிரதமர் மோடி. விலையைக் குறைக்க வேண்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த அழுத்தம் மிக முக்கியமான காரணம் என்று சமீபத்தில் சவுதி அரேபிய எண்ணெய் அமைச்சர் கலீத் அல் ஃபாலிஹ் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

(Led by Modi, it has been very strongly making a case for oil producers’ cartel OPEC to price crude at reasonable and responsible rates. -  Khalid Al Falih )

உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோரான இந்தியா, இத்தனை வருடங்கள் போல் அல்லாமல் துணிச்சலான சில முடிவுகளை எடுத்ததன் பலன் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாகச் சரிந்திருக்கிறது என்பதோடு இல்லாமல் சர்வதேச அரசியல் தலைமையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.(அது குறித்து தனியாக விரிவாக பின்னர் விளக்க இருக்கிறோம்.)

இப்போதைக்கு, குரூட் ஆயிலின் விலை 50 டாலருக்கும் கீழ் வந்திருப்பது பல வளரும் நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும். டெக்னிகல் படி, குரூட் ஆயில், 45லிருந்து 55 டாலருக்குள் மையம் கொள்வது உலகப் பொருளாதாரத்திற்கு நல்லது. 40 டாலர்களுக்குக் கீழே வீழ்ந்தால், வளைகுடா நாடுகள் மற்றும் வெனிசுலா, ஈரான், ரஷ்யாவின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடையலாம். உலகின் எந்தவொரு நாட்டின் பொருளாதாரம் அளவுக்கு மீறி சரிந்தாலும் அது எல்லா நாடுகளையும் பாதிக்கவே செய்யும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close