ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 11:30 am
sc-refuses-to-stay-ngt-order-that-ordered-reopening-of-sterlite-plant

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஆலையை திறக்க தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவும் ரத்தும் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றதையடுத்து, ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தொடர்ந்து ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்க வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளித்து கடந்த டிசம்பர் 15ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்க தீர்ப்பிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று நடத்திய விசாரணை முடிவில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது, அதாவது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும், ஆலையினை திறக்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஆலையை திறக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கையை முழுவதுமாக நிராகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

newstm.in

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு! முழு விபரம்...

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close