கார்பொரேட் மோடியும்...வாராக் கடன்களும்..!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 09 Jan, 2019 10:51 pm

corporate-modi-special-story

கார்பொரேட்களுக்குக் கொடுத்த கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது மோடி அரசு என்று பால்வாடிக் குழந்தைகளைக் கூடச் சொல்லச் சொல்லி விஷமத்தைப் பரப்பிய மீடியாக்கள், இப்பொழுது 18 துவாரங்களையும் (பக்கத்திலிருப்பவர்களதையும் சேர்த்து) மூடிக்கிட்டு இருப்பது இந்திய மக்களின் சாபக்கேடுகளில் ஒன்று!

இந்திய வங்கிகளில் பத்து லட்சம் கோடிகள் வரை வாராக்கடன் இருந்தன. இல்லையில்லை நீங்க நினைக்கிற மாதிரி இந்தக் கடனுக்கெல்லாம் பிரதமர் மோடி சிபாரிசு பண்ணல. போன ஆட்சி வரை கொடுத்த கடன் தான். ஆமாம் ஆமாம் மல்லையா கடனும் சேர்த்து தான். 

கார்பொரேட் மீது அதிக அன்பு கொண்ட பிரதமர், திவால் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதனால், எல்லா கார்பொரேட்களும் சிறப்பாகப் பயனடைந்தன. எடுத்துக்காட்டுக்கு, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானியின் நாற்பதாயிரம் கோடி ரூபாய் கடன்களை அடைக்க ஆரம்பித்து விட்டார். அதிலும் மும்பையிலிருந்த மின்சார பிஸினஸை விற்று 18,800 கோடி ரூபாய் கடனை அடைத்தார். 

சமீபத்தில் கூட எஸ்ஸார் நிறுவனம் ஒரு பன்னிரெண்டாயிரம் கோடி ரூபாய் கடன்களை அடைத்து கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை அடைத்து விட்டது. 

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரமூன்றரை லட்சம் கோடி ரூபாய்களை (ரூ 3.5 லட்சம் கோடிகள்) இந்திய வங்கிகளுக்கு கார்பொரேட் நிறுவனங்கள் செலுத்தியிருக்கிறது. 

இது தவிர நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றோர்கள் தங்கள் சொத்துகளையும் விற்று எங்கள் கடனை அடைக்க உதவச் சொல்லி மோடிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இப்படியாக பிரதமர் மோடி மக்களுக்கு இலவசங்கள் என்று ஏதும் கொடுக்காமல் கார்பரேட்களின் கடனை அடைக்கவே அதிகம் உழைக்கிறார் என்று அறிவுஜீவிகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.