தமிழகத்தில் ரஜினி, அதிமுகவுடன் கூட்டணியா?- மோடி பதில்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 01:32 pm
modi-about-alliance-with-admk-rajini

அதிமுக, ரஜினியுடன் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். 

தமிழக பா.ஜ.க தேர்தல் பொருப்பாளர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் பேசினார். அப்போது, அவரிடம் தமிழகத்தில் அதிமுக, ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களை வரவேற்கிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணி இருக்கும். கட்டயாத்தின் அடிப்படையில் இருக்காது.  20 ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக கூட்டணி அமைத்தவர் வாஜ்பாய். அவர் வழியில் கூட்டணி அமைக்கப்படும்" என்றார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close