என்.டி.ஏ., தேர்வு: யு.பி.எஸ்.சி., அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 01:31 pm
nda-exam-announcement-by-upsc

 

என்.டி.ஏ., எனப்படும் தேசிய ராணுவ பயிற்சி மையத்தில் சேர, இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

தேசிய ராணுவ பயிற்சி மையம் மற்றும் கடற்படை பயிற்சி மையத்தில், காலியாக உள்ள, 392 இடங்களில் சேர, விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; 2 ஜூலை, 2000க்கு முன்போ, 1 ஜூலை,2003க்கு முன்போ பிறந்திருக்க கூடாது.
தகுதியும், விருப்பமும் உடையோர், upsconline.nic.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close