தி ஆக்சிடென்டல் பிரைம் மினஸ்டர் படம் திரையிட்ட தியேட்டரில் காங்கிரசார் கலவரம்: 8 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 02:05 pm
six-arrested-for-demonstration-against-the-accidental-prime-minister-in-kolkata

 தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரின் திரையை கிழித்த கலவரம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவரது ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு  தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிகர் அனுபம் கெர், சஞ்சய் பாருவேடத்தில் அக்சய் கண்ணா மற்றும் சோனியா, ராகுல், வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் கதா பாத்திரங்களிலும் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. 

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் இந்த படம் திரையிடப்பட்ட தியேட்டரில் காங்கிரசார் கலவரம் நடத்தினர். மேலும் தியேட்டரின் திரையையும் அவர்கள் கிழித்தனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்த போலீசார் 8 காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களை கைது செய்தனர். தியேட்டரில் தாக்குதல் நடத்தியதற்கு இந்த படத்தில் நடித்த அனுபம் கெர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் கருத்துரிமை பற்றி பேசுவதை உங்கள் தொண்டர்கள் கேட்பதில்லை" என்று ராகுலை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சமீபத்தில் துபாய் சென்ற ராகுல் அங்கு சகிப்புத்தன்மை பற்றி பேசினார். இந்நிலையில் அவர் கட்சித் தொண்டர்களே இவ்வாறு செய்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close