மேற்கத்திய வாழ்க்கை முறை வேண்டாம் - வெங்கய்ய நாயுடு அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 08:50 am
dont-follow-western-lifestyle-vice-president-venkaiah-naidu-advice

மேற்கத்திய பாணியிலான வாழ்க்கை முறையை கைவிட்டு, இந்திய பாரம்பரிய முறையில் உணவு உண்பது, ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்வது போன்ற பாதைக்கு மக்கள் திரும்ப வேண்டும் என்று துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார். ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:

இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகை செய்யும் பாரம்பரிய முறைகளுக்கு மாற வேண்டிய தருணம் இது. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். மேற்கத்திய வாழ்க்கை முறையை கைவிட வேண்டும்.

பாரம்பரிய உணவுப் பழக்க முறையானது, அந்தப் பகுதிகளுக்கும், சீதோஷ்ண நிலைமைக்கும் ஒத்துப் போகக் கூடியது. இளைஞர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த உலகமே ஒரு குடும்பம் என்பதும், ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் மாபெரும் தத்துவங்கள் ஆகும் என்றார் அவர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close