இந்தியப் பாதுகாப்புக்கு புதுவித அச்சுறுத்தல். - சமாளிக்குமா மத்திய அரசு?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 19 Jan, 2019 02:08 pm
new-threat-to-indian-security

தேசத்தின் பாதுகாப்பு என்பது அந்நியப் படையெடுப்பினைத் தடுப்பது மட்டுமில்லை. கலாச்சாரம் மற்றும் சுய அடையாளத்தையும் காப்பது என்று நம் எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால், இந்தியா இதற்கு முன் பெரிதும் சந்திக்காத புது விதப் பிரச்சினையைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. 

அது தான் அந்நிய தேசத்து மக்கள் இந்தியாவிற்குள் ஊடுருவுதல். இதுவரை இந்தியாவிற்குள் ஊடுருவியிருக்கும் அந்நியர்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.  இது பல உலக நாடுகளின் மொத்த ஜனத் தொகையை விட அதிகம். (உலகத்தில் 150 நாடுகளின் மக்கள் தொகை 4 கோடிக்கும் குறைவு என்பதை மனதில் கொண்டால் ஊடுருவிய மக்கள் தொகையின் ஆபத்தின் அளவைப் புரிந்து கொள்ளலாம்) குறிப்பாக பங்களாதேஷிலிருந்து ஊடுருவியவர்களே அதிகம். இதனால், மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்பொழுது அந்த ஊடுருவல், தென்னிந்தியாவில் ஊடுருவும் அளவிற்கு மலிந்து விட்டது.. 

இதன் காரணமாக, முறையற்ற பணப் போக்குவரத்து ஏற்படுகிறது. அதாவது இங்கே சம்பாதித்து அந்தப் பணத்தை வங்கிகள் வழியாக இல்லாமல் குருவி போன்ற சட்டவிரோத பரிவர்த்தனைகளால் நடைபெறுவதால் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டிற்குள் வராது போய் விடும். அதே நேரத்தில் நாட்டின் கருப்புப் பணம் அதிகரிப்புக்கு பெரிது உதவுகிறது. இது நிச்சியம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான பெரும் சவால் தான்.

 மேலும், அரசாங்கம் தன் குடிமக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் பணங்களை ஓட்டு வங்கி அரசியலால் இது அந்நிய தேச ஊடுருவிய மக்களுக்குச் செலவளிக்கப்படுகிறது. நாம் சம்பாதித்து கட்டும் வரி அடுத்த நாட்டினருக்கு முறைகேடாகக் கொண்டு செல்லப்படுகிறது. நகரங்களின் முக்கியமான இடங்களில் உடுருவல்காரர்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து குடியிருப்பினை உருவாக்கி விடுகின்றனர். அவர்களுக்கு தேசவிரோதிகள் பாதுகாப்பாக இருந்து கொண்டு தங்கள் தேசவிரோத செயல்களுக்கு இந்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தேசப் பாதுகாப்பிற்கு இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். 

இது போன்ற பல விசயங்களைப் பற்றி விவாதிக்கத் தான் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மதுரையில் கூடி இருக்கின்றது. இந்த இயக்கத்தின் பெரிய பலம் என்பது துறை சார்ந்த பொருளாதார மேதைகளால் கட்டமைக்கப் பட்ட இயக்கம். அதாவது விவசாயத்துறையின் பொருளாதாரம் பற்றிய அறிவிலிருந்து அந்நிய நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம் வரையிலான பொருளாதாரம் பற்றிய நுண்ணிய பார்வை கொண்ட அறிஞர்கள் கூடியிருக்கின்றனர். 

 மாநாட்டுக் கூட்டத்தின் இறுதியில் அவர்கள் எடுத்திருக்கும் தீர்மானம் வெளியிட்டவுடன் வாசகர்களுக்கு இன்னும் விரிவாக எடுத்துரைக்கப்பட காத்திருக்கிறோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close