மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்: பிரதமர் மாேடி பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 06:23 pm
pm-modi-wishes-the-middle-class-people-on-budget

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், ஏழை விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கான வரப்பிரசாதம் என, பிரதமர் நரேந்திர மாேடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

மத்திய பட்ஜெட் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியில், வரி செலுத்துவோர் பெரும்பங்காற்றி வருகின்றனர். தவறாமல் வருமான வரி செலுத்தி வரும் நடுத்தர வர்க்கத்தினர், நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். 

அவர்கள் தொடர்ந்து வரி செலுத்தியதன் மூலமே, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிந்துள்ளது. வருமான வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நன்மை செய்யும் வகையில், இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. 

குறைந்த வருவாய் பிரிவில் உள்ள, ஆண்டிற்கு, 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் ஈட்டும் தனி நபர்கள், இனி வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு, அவர்களுக்கு இந்த அரசு அளித்துள்ள மிகப் பெரிய பரிசு. 

அதேபோல், மிகவும் சிறிய விவசாயிகளுக்கு, நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், 12 கோடி விவசாயிகள் பலன் அடைவர். 3 கோடி நடுத்தர வர்க்கத்தினர், வரி செலுத்தும் நிதிச் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது போலவே எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்’’ என அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close