திவாலானது அம்பானியின் நிறுவனம்!

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 02:59 pm
debt-ridden-rcom-to-file-for-bankruptcy

முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவாலாகிவிட்டது என அறிவிக்க விண்ணப்பித்துள்ளார். 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி கடனில் சிக்கி தவித்து வந்தது. இந்த நிறுவனம் 7 பில்லியன் டாலர் அளவில் கடன் உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தது. அதன் பிறகு கடன் கொடுத்த நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இதனையடுத்து அனில் அம்பானி சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயன்றார். ஆனால் சொத்துக்களை விற்க முடியாததால் தற்போது நிறுவனம் திவால் என அறிவிப்பதற்காக அவர் விண்ணப்பித்துள்ளார். இதற்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுக அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒருகாலத்தில் தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டி பறந்த ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது கடனில் முழ்கி திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close