கேரளாவில் இஸ்லாமிய வாலிபர் கொலை: சிபிஎம் தலைவர்கள் மீது வழக்கு

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 10:12 am
cbi-charges-kerala-cpm-leaders-for-murder-of-muslim-teen

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் இஸ்லாமிய வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஎம் கட்சித் தலைவர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ஷுக்கூர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் ஷுக்கூரை கடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் அவரை கடத்திய பிறகு புகைப்படம் எடுத்து கன்னூர் மாவட்ட சிபிஎம் தலைவர் பி. ஜெயராஜன் மற்றும் எம்எல்ஏ ராஜேஷுக்கு அனுப்பி உள்ளனர். முன்னதாக ஜெயராஜன் சென்ற காரின் மீது இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

எனவே ஷுக்கூரும் தாக்குதல் நடத்தியவர்களுள் ஒருவரா? என்பதை தெரிந்து கொள்ள ஜெயராஜுக்கு புகைப்படம் அனுப்பி உள்ளனர். அவர் அதனை உறுதிப்படுத்திய பின் ஷுக்கூரை மரத்தில் கட்டி வைத்து 3 மணி நேரத்தில் விசாரணை நடத்தி உள்ளனர். இதன் இறுதியில் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கிடையயே ஷுக்கூரின் சகோதரர் சிபிஎம் தலைவர்களிடம் அவரை விட்டுவிடும்படி கெஞ்சி உள்ளார். ஆனால் அதற்கு பலன் கிடைக்க வில்லை. 

இந்நிலையில் தற்போது சிபிஎம் தலைவர் பி. ஜெயராஜன் மற்றும் எம்எல்ஏ ராஜேஷ் மீது இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

ஷுக்கூர் முதலில் சிபிஎம் கட்சியில் இருந்ததாகவும் பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சிக்கு மாறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close