மருத்துவமனையில் நலமுடன் உள்ள அபிநந்தன்... வீடியோ வெளியீடு !

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 06:51 pm
abinandan-is-fine-video-released

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய விங் கமாண்டர் அபிநந்தன், மருத்துவமனையில் நலமுடன் உள்ள வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. இதில், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதன் காரணமாக, இன்று பாகிஸ்தான் போர் விமானங்கள், காஷ்மீர் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் விமானங்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு இந்திய போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றன. இதைத்தொடர்ந்து, மிக்-21 போர் விமானம் மற்றும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் (Wing Commander) அபிநந்தன் என்பவரை பாகிஸ்தான் ராணுவத்தினர், வைத்துள்ளது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

இதனிடையே, அபிநந்தன் மருத்துவமனையில் நலமுடன் உள்ள வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் அபநந்தன் தேனீர் அருந்திக் கொண்டே பாகிஸ்தான் ராணுவ அதிகாரியிடம் பதில் அளித்து வருகிறார்.  மேலும், தான் நலமுடன் இருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தன்னை மரியாதையுடன் நடத்தியதாகவும், குறிப்பிடுகிறார். விமானம் குறித்தும், இந்திய ராணுவம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அது குறித்து தான் எதுவும் கூற முடியாது என  பேசியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close