விங் கமாண்டர் அபிநந்தனை நாளை விடுவிப்போம்: இம்ரான் கான் 

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 04:49 pm
pakistan-prime-minister-imran-khan-as-a-peace-gesture-we-are-releasing-wing-commander-abhinandan-tomorrow


பாக்., ராணுவத்தின் வசம் உள்ள இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிக்க, அந்நாட்டு அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன் படி , அவர் நாளை நம் நாட்டிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். 

ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாக்., போர் விமானத்தை துரத்தி சென்ற, இந்திய விமானப் படை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன், எதிர்பாராத விதமாக, பாக்., ராணுவத்திடம் சிக்கினார். 

அவரை மீட்பதில், மத்திய அரசு பெரு முயற்சி எடுத்தது. அபிநந்தனை எவ்வித நிபந்தனையும் இன்றி ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையிலும், அமைதியை விரும்பும் நோக்கத்திலும், அபிநந்தனை, நாளை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக, பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

இது, இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close