தேசப்பற்றை மிஞ்சியதா கட்சி விஸ்வாசம்? பாகிஸ்தானுக்கு சல்யூட் அடிக்கும் குஷ்பு !

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 09:35 pm
kusboo-asks-pm-modi-to-learn-from-pakistan

அபிநந்தனை விடுவிப்பதற்காக இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தும், இம்ரான் கானிடம் பிரதமர் மோடி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் குஷ்புவின் ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் இந்திய எல்லையோர கிராமங்கள் மீது கடந்த சில மாதங்களாகவே அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வந்தனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குத‌லை பாகிஸ்தான் கண்டிக்கவில்லை. 

ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் மீண்டும் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் வெளியானதால், பாகிஸ்தான் ராணுவம் அல்லாத, அங்குள்ள பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்கள் மீது இந்திய விமானப்படை 12 மிராஜ்  போர் விமானங்களில், வெறும் 21 நிமிடங்கள் பறந்து, ஆயிரம் கிலோ வெடிப் பொருட்கள் வீசி, பயங்கரவாதிகள் இருந்த இடத்தை பஸ்பமாக்கினர். இந்த தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் உள்பட 300 மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், நேற்று காஷ்மீர் எல்லைக்குள் புகுந்த எப்-16 என்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்தியா வீழ்த்தியது.  இந்த தாக்குதலின் போது எதிர்பாராத விதமாக இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த, அனுபவம் வாய்ந்தவர் விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார்.  அவரது மிக் விமானம் எல்லைக்கோட்டை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் அவரை பிடித்து வைத்துள்ளது. விமானி அபிநந்தனை அந்நாட்டு ராணுவத்தினர் அடித்துள்ளனர். இதில் அவரது ஒரு கண் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து பாகிஸ்தானின் துணைத் தூதரை அழைத்து அபிநந்தனை துன்புறுத்தாமல் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் ஜெனிவா ஒப்பந்தப்படி திருப்பி அனுப்ப வேண்டும் என்று நாகரிகமாக, தனிப்பட்ட முறையில் இந்திய அரசு கேட்டுக் கொண்டது. பின்னர் பகிரங்கமான இந்த தகவல் வெளியிடப்பட்டது. 

பின்னர், நல்லெண்ண அடிப்படையிலும், அமைதியை விரும்பும் நோக்கத்திலும், அபிநந்தனை, நாளை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.  இது, இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அபிநந்தனை விடுவிப்பதற்காக இம்ரான்கானுக்கு நன்றி தெரிவித்தும், இம்ரான் கானிடம் பிரதமர் மோடி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குஷ்பு தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் வெறுப்பு காரணமாக குஷ்பு இவ்வாறு பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோடி மீது விருப்பு, வெறுப்பு இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் இப்படி தேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தான் பிரதமரை பாராட்டியும், குஷ்பு பதிவிட்டிருப்பதால், அவர் இந்தியரா அல்லது பாகிஸ்தானியரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில் சாடல்கள் குவிந்து வருகின்றன. 

இந்தியாவின் நெருக்கடிக்கு அடிபணிந்து பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை, இந்தியாவின் வெற்றியாக பார்க்காமல், பாகிஸ்தானின் தானமாக பார்க்கும் அற்ப புத்தி, சில எதிர்க்கட்சியினரை விட்டுவைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு போன்றோர், பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு சல்யூட் அடித்தாலும் அடிப்போமே தவிர, இந்திய அரசையோ, பிரதமர் மோடியையோ பாராட்டி விடக் கூடாது என்பதில் குறியாக உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close