வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார் இந்திய விமானி அபிநந்தன்...!

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 09:34 pm
abinandan-handed-over-to-india

பல மணி நேர தாமதத்திற்குப் பின்னர் வாகா எல்லையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், இந்திய எல்லை பாதுகாப்புப்படை மற்றும் இந்திய விமானப்படையிடம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.  

அபிநந்தனை ஒப்படைப்பது குறித்து பாகிஸ்தான் இருமுறை நேரத்தை மாற்றியுள்ளதாகவும், ஆவணங்கள் சரிபார்ப்பு காரணமாக அபிநந்தன் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அபிநந்தன் விவகாரத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டு வந்தார். 

அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இதேபோல் சென்னை அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் உள்ள அபிநந்தனின் இல்லம் அருகே ஏராளமானோர் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close