அபிநந்தன் தாயகம் திரும்பியது மகிழ்ச்சி: தளபதி ஆர்.ஜி.கே.கபூர் !

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 11:16 pm
iaf-happy-to-receive-abinandan-rgk-kapoor

இந்திய விமானப்படை யின் விங் கமாண்டர் அபினந்தன் தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக விமானப்படைத் தளபதி ஆர்.ஜி.கே.கபூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தார். 

நேற்று மாலை அபினந்தன் வாகா எல்லை வந்தடைந்தபோதும், ஆவணங்கள் சரிபார்ப்பு காரணமாக அவரை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இரவு சுமார் 9.20 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள்,  இந்திய விமானி அபினந்தனை இந்திய எல்லை பாதுகாப்புப்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தாயகம் திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என விமானப்படைத் தளபதி ஆர்.ஜி.கே.கபூர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ஆர் ஜி கே கபூர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இரு நாடுகளின் நடைமுறைப்படி விமானப்படை வீரர் அபினந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் எனவும், வழக்கமான நடைமுறைப்படி அபினந்தன் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்தார். மேலும், அபினந்தன் தாயகம் திரும்பியதில் இந்திய விமானப்படை மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், கபூர் தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close