ராணுவ வீரர்களின் படங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 09:03 am
election-commission-warned-parties

ராணுவ வீரர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா எச்சரித்துள்ளார்.

இது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷன் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை தேர்தலுக்கான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எவ்விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்றும், இது குறித்து அந்தந்த கட்சிகள் தனது, வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், சில அரசியல் கட்சிகள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தேர்தல் பிரசார விளம்பரங்களில் பயன்படுத்துவதாக தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு ராணுவ அமைச்சகம் கொண்டு வந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் பிரமோத் குமார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close