யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்: தாயும், சேயும் உயிரிழப்பு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 03:53 pm
unmarried-woman-tried-giving-birth-watching-youtube-sadly-both-the-mother-and-child-died

கோராக்பூர் பகுதியில் திருமணம் ஆகாத 25 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் யூடியூப்பை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்டதில் அப்பெண்ணும் குழந்தையும் உயிரிழந்தனர்.

பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள இச்சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த  25 வயது பெண் ஒருவர், கோரக்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி, அரசு போட்டித் தேர்வுகளுக்கு படித்து வந்தார்.

இந்நிலையில், அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். 

உள்ளே அந்த பெண்ணும், பிறந்த குழந்தையும் இறந்து கிடந்துள்ளனர். அந்த அறையை போலீசார் சோதனை செய்ததில், அப்பெண் யூடியூப்பை பார்த்து, தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளது தெரியவந்துள்ளது. 

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமமான அந்த பெண் யாருக்கும் தெரியாமலேயே தனக்கு தானே பிரசவம் பார்க்க முயற்சித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close