பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை: சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம் 

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 07:26 am
no-compromise-with-pakistan-sushma-swaraj

 பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த மாதம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்திருந்தார்.  இதை மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. 

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து இரட்டை வேடம் போடுவது முட்டாள்தனமானது எனவும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி ஒப்புக்கொண்டபோதும், ராணுவம் அதை மறுப்பதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், பேச்சுவார்த்தை நடத்துவதில் உண்மையான அக்கறையும், தாராளமும் இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைத்து தனது ராஜதந்திரத்தை இம்ரான்கான் நிரூபிக்கட்டும் என அவர் பேசினார். 

தொடர்ந்து அவர் பேசும்போது, பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாதிகள் மீது அந்த நாடு நடவடிக்கை எடுக்காதவரை, பேச்சுவார்த்தை என்பது கிடையாது எனவும், பயங்கரவாதம் இல்லாத அமைதியான சூழல் நிலவினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close