கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், கால்பந்து வீரர் சுனில் சேத்ரிக்கு பத்மஸ்ரீ விருது!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 11:42 am
padma-awards-for-gowtham-sunil

கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், கால்பந்து வீரர் சுனில் சேத்ரிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார். 

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண்,  பத்ம விபூஷண் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்ட்டது. விருது பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டது. 

கடந்த 12ம் தேதி முதற்கட்டமாக 56 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் இன்று இரண்டாம் கட்டமாக  விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் 56 பேருக்கு விருதுகளை வழங்கினார்.

இதில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, தபேலா இசைக்கலைஞர் ஸ்வபன் சவுத்திரி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார். இதேபோல், மலையேறும் வீராங்கனை பச்சேந்திர பாலுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close