பாகிஸ்தான் தேசிய தின விழாவை புறக்கணிக்கும் இந்தியா !

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 07:08 am
india-refused-pakistan-s-invitation-for-its-nationals-day-celebration

டெல்லியின் இன்று நடைபெறவுள்ள பாகிஸ்தான் தேசிய தின விழாவில் பங்கேற்க, விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. 

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான் தேசிய தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு இந்திய அரசு சார்பில் யாரையும் அனுப்பப்போவதில் என்று முடிவு செய்துள்ளதாகவும், இஸ்லாமாபாத்தில் நடைபெறும் பாகிஸ்தான் தேசிய தினம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அங்குள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியா செல்ல மாட்டார் எனவும், ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close