நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை அறிவிப்பது தேர்தல் விதிமீறல் அல்ல: தேர்தல் ஆணையம்

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 02:18 pm
information-of-the-country-s-security-is-not-a-violation-of-the-election-rules

நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை அறிவிப்பது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவது ஆகாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோளை, ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் திட்டமான "மிஷன் சக்தி" என்ற சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பதை இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, வானொலி, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக நேரடியாக அறிவித்தார். 

அதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி, இந்த தகவலை எப்படி அறிவிக்கலாம் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. 

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை அறிவிப்பது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவது ஆகாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close