பிரதமரின் அனுமதிக்கு பிறகே 'மிஷன் சக்தி' திட்டம்: டி.ஆர்.டி.ஓ. தலைவர்

  ராஜேஷ்.S   | Last Modified : 28 Mar, 2019 10:42 am
mission-power-project-after-prime-minister-modi-s-approval-drdo-chairman

காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை என்ற புகாருக்கு, 'மிஷன் சக்தி' திட்டம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் முழுமையான செயல் வடிவத்துக்கு வந்தது என்று, டி.ஆர்.டி.ஓ., தலைவர் சதீஷ் ரெட்டி விளக்கமளித்துள்ளார்.

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை திட்டம் குறித்து டி.ஆர்.டி.ஓ., தலைவர் சதீஷ் ரெட்டி கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக  'மிஷன் சக்தி' திட்டம் ஆராய்ச்சி நிலையில் இருந்து வந்தது. பிரதமர் மோடி அனுமதி அளித்த பிறகு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான்   'மிஷன் சக்தி' திட்டம் தயார் நிலைக்கு வந்து, முழுமையான செயல் வடிவத்துக்கு வந்தது. இந்த திட்டத்துக்காக 100க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இரவு பகலாக வேலை செய்தனர்' என்றார்.

மேலும், பிற செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படாமலிருக்க குறைந்த தொலைவில் உள்ள செயற்கைக் கோள் தேர்வு செய்யப்பட்டதாகவும், செயற்கைக்கோளை  'மிஷன் சக்தி' திட்ட ஏவுகணை மிகவும் துல்லியமாகத் தாக்கி அழித்ததாகவும் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்கான தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகவும்  டி.ஆர்.டி.ஓ., தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close