முன்னாள் இஸ்ரோ தலைவருக்கு கொலை மிரட்டல்

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Mar, 2019 12:59 pm
former-isro-chairman-madhavan-nair-who-joined-bjp-gets-death-threat

இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக இருந்தவர் மாதவன் நாயர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவர் பாஜகவில் இணைந்தார். இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த கடிதம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பெயரில் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து மாதவன் நாயர் கேரள போலீஸில் புகார் அளித்தார். இந்த கடிதம் குறித்து முதலில் மறுத்த மாதவன் நாயர், கொலை மிரட்டல் குறித்து உளவுத்துறை தமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close