ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் இனி நேரடியாக பார்க்கலாம்! : இஸ்ரோ

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 08:53 am
first-time-see-rocket-launch-people-isro

ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்களும் நேரில் பார்க்க, நாளை முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ( இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (ஏப்ரல்.1) விண்ணில் ஏவப்படுகிறது. இதனை பொதுமக்களும் நேரடியாக காணலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ நிர்வாகம் கூறும்போது,  ராக்கெட் ஏவப்படுவதை மக்கள் பார்க்கும் வகையில், 5 ஆயிரம் பேர் அமரும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரங்கிற்குள் இந்திய குடிமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. 

ராக்கெட் ஏவப்படுவதை பார்க்க, 10 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு வழங்கியுள்ள ஏதேனுமொரு அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close