ஜம்மு-காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 07:42 am
four-terrorists-killed-in-jammu-and-kashmir

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டம், லசிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, லஷ்கர் -இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று அதிகாலை துப்பாக்கிச் சண்டை நடந்தது.  சில மணி நேரம் நீடித்த இச்சண்டையில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close