29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக வி்ண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட்!

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 02:59 pm
bslv-c-45-rocket-launches

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட்  விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. 

காலை 9:27  மணிக்கு விண்ணில் பாய்ந்த ராக்கெட், சரியாக 9:45 மணியளவில் எமிசாட் செயற்கைக்கோளை அதன் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.  அதனைத் தொடர்ந்து, 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் குறிப்பிட்ட நேரத்தில் மற்றொரு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.

28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைகோள் உள்ளிட்டவை அடங்கும். ஒரே ராக்கெட்டிலிருந்து செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி வட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். 

436 கிலோ எடைக் கொண்ட எமிசாட் செயற்கைக்கோள், இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள் மூலம் மின்காந்த அலைக்கற்றைகளை கண்காணிக்க முடியும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close