சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம்!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 03:06 pm
4-border-security-force-solider-death-in-chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுகளுக்கும், எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் முன்னதாக எல்லைப் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது 4 பேர் வீரமரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்கெர் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் நால்வர் இறந்துள்ளதாகத் தகவல் தெரிய வந்துள்ளது. சக வீரர்கள் உயிரிழந்தபோதிலும் ஏனைய வீரர்கள் மாவோயிஸ்ட்டுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அப்பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்டுகளை முடக்கும் வரை சண்டை தொடரும் என எல்லை பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close