பாஜக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன்: மோடி

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 09:26 pm
prime-minister-modi-s-comment-to-lk-advani

பாஜக கொள்கைகளின் சாரத்தை எல்.கே.அத்வானி மிகத்தெளிவாக கூறியுள்ளதாக, பிரதம்ர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக தொடங்கப்பட்ட தினத்தையொட்டி, அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். அதில், "எனக்கு முதலில் நாடு, அதன் பிறகு கட்சி, கடைசியில் தான் சொந்தநலன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்வானியின் இந்த அறிக்கை குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பாஜக கொள்கைகளின் சாரத்தை எல்.கே.அத்வானி மிகத்தெளிவாக கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். எல்.கே.அத்வானி போன்ற தலைவர்கள் பாஜகவை வலிமைப்படுத்துவது பெருமையாக உள்ளது" என மோடி குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close