38 கிமீ இலக்கை தாக்கும் தனுஷ் பீரங்கிகள்: ராணுவத்திடம் ஒப்படைப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 08:19 am
army-gets-first-batch-of-dhanush-home-made-bofors-artillery-guns-from-ofb

38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கிகள் என்ற பெருமையை பெற்றதுமான தனுஷ் பீரங்கிகள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இந்திய ராணுவத்தின் தேவைக்காக 114 தனுஷ் பீரங்கிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம், தளவாட தொழிற்சாலை வாரியத்துக்கு வழங்கியள்ளன. முதல் கட்டமாக இதில் 6 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தளவாட தொழிற்சாலை வாரிய இயக்குனர் சவுரவ் குமார் கொடியசைத்து பீரங்கிகளை வழியனுப்பி வைத்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கிகள் என்ற பெருமையை தனுஷ் ரக பீரங்கிகள் பெறுவதோடு, இந்த பீரங்கிகள் 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close