ஒடிஸா மாநிலம், மல்கங்கிரி மாவட்டத்தின் சித்ரகொண்டாவில் அமைக்கப்பட்டிருந்த 6 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் யாருமே வாக்களிக்க வரவில்லை.
மக்களவைத் தேர்தலில் இன்று முதல்கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், ஒடிஸா மாநிலம், மல்கங்கிரி மாவட்டத்தின் சித்ரகொண்டாவில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் யாரும் வாக்களிக்கவில்லை. நக்சல் அச்சுறுத்தல் காரணமாக வாக்காளர்கள் யாரும் வாக்களிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
newstm.in