குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முன்னாள் ராணுவ அதிகாாிகள்- குடியரசு தலைவா் மாளிகை மறுப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Apr, 2019 02:55 pm
as-congress-attacks-bjp-citing-ex-servicemen-letter-over-politicisation-of-forces-two-ex-chiefs-deny-signing

பாஜகவின் மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் ராணுவம் இழுக்கப்படுவது கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் என்று டாப் பாஜக தலைவர்கள் 10 வார்த்தை பிரசாரத்தில் பேசினால், 8 வார்த்தை ராணுவம் என்றே இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், தேர்தல் பிரசாரங்களில் பாதுகாப்பு படைகள் பற்றி பேசுவதை எதிர்த்து முன்னாள் தளபதிகள், முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து எந்த கடிதமும் வரவில்லை என்று குடியரசு தலைவா் மாளிகை மறுத்துள்ளது. மேலும் முன்னாள் ராணுவ அதிகாாிகளான என்.சி.சூாி மற்றும் ரோட்ாிஜஸ் ஆகியோரும் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனா்.

மேலும் இது தொடா்பான கடிதத்தை தாங்கள் பாா்க்கவேயில்லை என்றும் நாங்கள் நாட்டிற்காக மட்டுமே பாடுப்பட்டோம் என்று தொிவித்துள்ளனா். வேண்டுமென்றே சிலா் ராணுவத்தை அரசியலாக்கி வருகின்றனா். அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை மட்டும் தான் நாங்கள் செய்து வந்தோம். அரசாங்கத்திற்கு நாங்கள் ஒரு கருவி மட்டுமே என்று தொிவித்துள்ளனா்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close